Friday, May 4, 2012

College Life and Friendship

கனவினில் வாழ்ந்தேன்
விழித்திட்டு எழுந்தேன்.

நாற்புறம் திரிந்தேன்
இருட்டை நோக்கினேன்
இருந்தும் நடந்தேன்.

தடுக்கி விழுந்தேன்
திரும்பிவிடலாமென நினைத்தேன்
எப்படியோ உள்ளிழுக்கப்பட்டேன்.

விஜடி- இல் நுழைந்தேன்.

வெளிச்சம் கண்டு பயந்தேன் - அங்கு
விதியை நினைத்து வணங்கினேன்
அப்போது ஓர்உண்மை அறிந்தேன்.

இந்நிலையில் பலர் துணை கண்டேன்
உடன்விரைந்து கை கோர்த்தேன்.

வருத்தம் கடந்து விரும்பினேன்
புதுத்தெளிவு   பிறக்க உணர்ந்தேன்  
பயம் தாண்டி நடந்தேன்.

பல நாட்கள் மறைய கடந்தேன் - அதில்
என் நட்பு மலர சிரித்தேன்.

நண்பர்கள் பலரை உடன் சேர்த்தேன்
நாலும் வெற்றிபெற வேகம் பெற்றேன்
என் வாழ்க்கை நல்-மருவ தொடர்ந்தேன்.

சுற்றம் அன்பு சுவைத்தேன் - என்
ஏற்றம் கண்டு வியந்தேன்
உண்மை ஆராய விரைந்தேன்
வாழ்நாட்களை புரட்டி போட்டேன் .

நண்பர்களே! என காரணம் புலர்ந்தேன்
இதை சொல்வதறியாது திகைத்தேன்.
 
என் செய்வதென சிந்தித்தேன்
நான்பெற்றதை அவர்களும்பெற விதைத்தேன்
நட்பில் அன்பு கலந்து நன்மைத்தூவி  ஊட்டிவிட்டேன்.

ஓர் திங்கள் காலை தொடங்கி;
 57 திங்கள்,
246 வாரம்,
1727 நாட்கள்
41,448 மணி நேரம்,
2,486,880 நிமிடங்கள்,149,212,800 நொடிகள்  கடக்கும் தருவாயில்,

என் கல்லூரி நாட்களில் எனக்கு நிழலாக இருந்த நண்பர்களை
இனி வரும் வாழ்வின் பாதையில்
அவர்களை சந்திப்பேன் என்ற நினைப்போடு
நினைவுகளாக இதையத்தில் பதித்து
பிரியாவிடை பெற்று எடுத்து செல்கிறேன்.

என்றும் அன்புடன்,
விஷ்ணு குமார்

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. "

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. "

"அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல் ".
-திருவள்ளுவர்

1 comment: