என் பார்வையில்: கொள்கைகள், தலைவர், நடத்தை, வரலாறு என சிலவற்றை அடிப்படையாய் வைத்து 5 பெரும் கட்சிகள் பற்றிய ஒரு முன்னோட்டம்.
அ.தி.மு.க. (ADMK) - சர்வாதிகாரம். ஒருவரே முக்கியம் என்ற கூட்டம். மானமும் நீதியும் ஓங்கிய தமிழ் பண்பில், நிங்களும் காலில் விழ தாயார் என்றால் வாக்கு செலுத்துங்கள் இவர்களுக்கு.
தி.மு.க. (DMK + நாட்டின் கரும் புள்ளியாக மாறி விட்ட காங்கிரஸ் ) - இத்தனை நடத்தும், தேர்தலில் நின்று, வாக்கு கேட்கிறார்கள் என்றால் நம்மை முட்டாள் என்று தானே நினைக்கிறார்கள். நீங்கள் முட்டாள? 60 ஆண்டு கால இருளுக்கு காரணமானவர்கள் இவர்கள். அவ்வளவு எளிதில் மன்னிப்பு தாரதிர்கள்.
மக்கள் நல கூட்டணி (DMDK, MDMK, VCK, CPI, CPI (M)) - இவர்களிடம் மாற்று ஆட்சி, மாற்று அரசியல் காண இயலாது. சந்தரப்பவாதிகள், பதவி மோகம், நிலையாக நின்று எடுத்ததை முடிக்க தெரியாதவர்கள், தலைவர் என ஒரு தொடக்கம் இல்லா முண்டங்கள். [கனவில் கூட விஜயகாந்தை என் நாட்டின் முதல்வாரக சிந்திக்க முடியவில்லை].
நாம் தமிழர் - தமிழ், தமிழ் என்று கூறி (ஆம், 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த அதே கதை) நம்மை இன்னும் என்ன செய்ய வருகிறார்கள் என்று விளங்கவில்லை. தமிழ் நாட்டை கொங்கு, மதுர, சோழம் என்று கூறு போடாமல் இருந்தால் சரி.
பா.ம.க. (PMK) - சாதியில் வளர்ந்து வாழும் கட்சி. இதற்க்கு மேல் சொல்லவேண்டுமா? இன்னும் 5 ஆண்டுகள் கழித்து, இவர்களை பற்றி சிந்திப்போம்.
No comments:
Post a Comment